தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போனஸ் கோரி துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள்  தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:06 pm

DIN

கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள்  தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள நகராட்சி காரநேசன் மருத்துவமனைக்குள் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தனியார் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் 280 பேரும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் கும்பகோணம் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. எனவே, துப்புரவு தொழிலாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீண்டும் பணியில் ஈடுபட நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.