கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் தீபாவளியன்று 4 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
தீபாவளியன்று கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி மடவளாகம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராஜா, சோழபுரம் விளந்தகண்டம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் ராஜசேகர், குப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தங்கமணி , காமராஜர் நகர் 7-ஆவது தெரு சாமிநாதன் மகன் செந்தில் ஆகியோரது குடிசை வீடுகளில் ராக்கெட் பட்டாசு விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.
இதேபோல தாராசுரம் சன்னதி தெரு, வைரநாதன் மகன் சசிக்குமார் வீட்டில் ராக்கெட் பட்டாசு விழுந்து தென்னை மரம் நாசமானது. தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயணைத்தனர். இவ்விபத்துகளால் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. மேலும் கும்பகோணம் ராமச்சந்திரபுரம் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் செந்தில்குமார் வீட்டில் மின் கசிவால் பிரிட்ஜ் எரிந்து நாசமானது.
பாபநாசத்தில்...
பாபநாசம் அருகே திருப்பாலைத் துறை கிராமம், திரெளபதை அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வெங்கடேசன், தொழிலாளி.
தீபாவளியையொட்டி செவ்வாய்க்கிழமை அந்த பகுதியினர் பட்டாசு வெடித்தபோது வெங்கடேசன் கூரை வீட்டில் தீப்பற்றி பொருள்கள் எரிந்து சேதமாயின.
தகவலறிந்து வந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலானஅலுவலர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.