தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்தது:
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளைக் குறைக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்கள் நாள்தோறும் காலை 6 மணிக்கே காய்ச்சலை உருவாக்கும் ஏ.டி.எஸ். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் அருகிலுள்ள இடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
மாவட்டத்தில் ஏ.டி.எஸ். கொசுக்கள் வளருவதற்கு ஏதுவான சூழ்நிலை எங்கு காணப்பட்டாலும், டெங்கு காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டாலும், டெங்கு காய்ச்சல் தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தாலும் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.