துக்க நிகழ்ச்சியில் 4 பேருக்கு வெட்டு 5 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கடந்த திங்கள்கிழமை தகராறு செய்து 4 பேரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கடந்த திங்கள்கிழமை தகராறு செய்து 4 பேரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை காவல் சரகம் இலுப்பக்கோரை எஸ்.பி.எம். நகரில் திங்கள்கிழமை நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே ஊர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு என்கிற ராம்குமார் (24) துக்க நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அந்த ஊர்க் காரர்களிடம் தகராறு செய்தாராம், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ராம்குமார், அவரது தந்தை ராஜேந்திரன், சகோதரர்கள் ரமணன், ராஜு,உறவினர் மணியன் உள்ளிட்டோர் சேர்ந்து சத்தியமூர்த்தி (35) சோழராஜன் (40), மணியன் (38),இந்திராணி (31) உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டினராம். மேலும் சமாதானம் செய்ய வந்த மகாலிங்கம் மகன் திருமுருகன் விரலையும் கடித்து காயப்படுத்தினராம்.
காயமடைந்தோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருமுருகன் கொடுத்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து ராம்குமார் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...