மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காவிரி மேலாண்மை வாரியம் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல்:127 பேர் கைது

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

Updated On :5 ஏப்ரல் 2018, 9:36 am IST

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 127 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில் சோழன் விரைவு ரயிலை மறிப்பதற்காக ரயிலடிக்குச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் வாயிலில் தடுத்து நிறுத்தினர். எனவே, எம்.ஜி.ஆர். சிலை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. திருஞானம், மாநகரச் செயலர் பி. கிருஷ்ணமூர்த்தி, சி. பக்கிரிசாமி, விவசாய சங்கத் தலைவர்கள் பா. பாலசுந்தரம், முத்து. உத்திராபதி, வீரமோகன், அ. பன்னீர்செல்வம், ஏஐடியுசி தலைவர்கள் வெ. சேவையா தி. கோவிந்தராஜன், ஆர்.பி. முத்துக்குமரன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜி. கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலர் ம. விஜயலெட்சுமி, இளைஞர் பெரு மன்ற மாவட்டச் செயலர் ஆர்.கே. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 13 பெண்கள் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சாமி. நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கும்பகோணத்தில் ரயிலை மறிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தலைமையில் நகரச் செயலர் ஆர். மதியழகன், ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் உள்பட 52 பேர் கைது செய்யப்பட்டனர். அனைத்து சக்திகளும் ஒருங்கிணைக்கப்படும்
தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் சி. மகேந்திரன் தெரிவித்தது: காவிரி நதி நீர் உரிமையைப் பாதுகாப்பதற்கு மாணவர்களும் இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் முழு வீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மண்ணையும் பண்பாட்டையும் பாதுகாக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்திய தமிழக இளைஞர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட், தேனி  நியூட்ரினோ எனப் போராடி, இப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என போராடி வருகின்றனர். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகிறேன்.
அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றியைக் கணக்கில் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்த கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக தேர்தலுக்காகக் காவிரி மேற்பார்வைக் குழு என சட்டத்துக்கு எதிராக மோடி அரசு அறிவித்தது. இதைத் தமிழக பாஜக ஏன் எதிர்க்கவில்லை? தமிழகத்தை சார்ந்த இவர்களுக்கு காவிரி மேலாண்மை முக்கியமா? கர்நாடகத் தேர்தல் வெற்றி முக்கியமா? என்பதைத் தமிழக மக்களுக்கு இவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அனைத்து சக்திகளையும் இணைத்து, தீவிரமான போராட்டங்களை நடத்தி காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் இந்திய கம்யூனிஸ்ட் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார் மகேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.