2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கான அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
விளையாட்டுத் துறையில் நம் நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுக்குத் தொடர்புடையவர்களுக்குப் பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மீது தொடர்புடைய விருதைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084 என்ற முகவரிக்கு ஏப். 15-க்குள் சேரும் விதமாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த விருது தொடர்பாக இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ (04362-235633) தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்கள் பெற 044-28364322.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

