ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் அஷ்டமி பூஜை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அருள்பாலித்து வரும் தவளவெண்ணகை அம்மன் உடனுறை

Updated On :9 ஏப்ரல் 2018, 2:47 am

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அருள்பாலித்து வரும் தவளவெண்ணகை அம்மன் உடனுறை  பாலைவனநாதர் கோயிலில் உள்ள இரட்டை பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அஷ்டமிபூஜை நடைபெற்றது.
இதையொட்டி இரட்டை பைரவர்களுக்கு எண்ணெய்,  பால், தேன், இளநீர்,சந்தனம்,பழரசம், பன்னீர் உள்ளிட்ட மங்கள பொருள்களால்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தூப,தீப,நெய்வேத்ய வழிபாடுகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.  
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மிளகு முடிச்சு தீபமேற்றி வழிபட்டனர். அப்பர் சேவாலயம் பரமசிவம்,வி.பி.கே. மூர்த்தி,பி.எஸ்.என்.எல். பாலசுந்தரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.