காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 101 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கபட நாடகமாடும் மத்திய அரசை கண்டித்தும், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், பெட்ரோலிய மண்டலம் போன்ற நச்சுத் திட்டங்களால் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். தலைவர் ரபீக்அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை மறிப்பதற்காகச் சென்ற இவர்களை நுழைவுவாயிலில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக 34 பெண்கள் உட்பட 101 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

