மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மத்திய அரசு விருது பெற அழைப்பு

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கான

Updated On :9 ஏப்ரல் 2018, 3:00 am

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கான அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
விளையாட்டுத் துறையில் நம் நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுக்குத் தொடர்புடையவர்களுக்குப் பல்வேறு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.  
அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கலாம்.  விண்ணப்பங்கள் அடங்கிய உறை மீது தொடர்புடைய விருதைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084 என்ற முகவரிக்கு ஏப். 15-க்குள் சேரும் விதமாக அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த விருது தொடர்பாக இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ (04362-235633) தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்கள் பெற 044-28364322.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.