கும்பகோணம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருச்சேறை சாளுவம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் முருகேசன் (45). அரைவை மில் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (40). இவர்களுக்கு ஐஸ்வர்யா (21), மோனிஷா (15) ஆகிய இரு மகள்களும், தமிழ்வேந்தன் (12), நிவாஸ் (9), ராகுல் (8) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
முருகேசன் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்வாராம். இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா, திங்கள்கிழமை இரவு வீட்டில் யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் விஷம் கலந்து, தனது 5 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இவர்கள் அனைவரும் மயக்க மடைந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மல்லிகா மற்றும் அவரது 5 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


