விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

நூறு நாள் வேலை கோரி காத்திருப்புப் போராட்டம்

நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த

Updated On :18 ஏப்ரல் 2018, 8:50 am IST

நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தைச் சீர்குலைக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நான்கு மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். சட்டக்கூலியான ரூ. 224-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பனகல் கட்டடத்தில் உள்ள தஞ்சாவூர் ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன், மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. அபிமன்னன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் கே. செளந்தரராஜன்,  மாதர் சங்க ஒன்றியச் செயலர் டி. வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல,  பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. மருதமுத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலர் சி. பாஸ்கர்,  மாதர் சங்க ஒன்றியத் தலைவர் என். வசந்தா ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ். வியாகுலதாஸ்,  விவசாய சங்க ஒன்றியத் தலைவர் கே. தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல,  பாபநாசம்,  அம்மாபேட்டை, திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், கும்பகோணம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் வேலை தருவதாகத் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து, பிற்பகலில் போராட்டம் கைவிடப்பட்டது.
கும்பகோணத்தில்...  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆர். தெட்சிணாமூர்த்தி, என். கணேசன், ஆர். கலா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 
போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சி. நாகராஜன், ஒன்றிய செயலாளர் பி. ஜேசுதாஸ், நகர செயலாளர் கே. செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
பாபநாசத்தில்... வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பாபநாசம் ஒன்றிய செயலாளர் வி.உமாபதி தலைமையில் 70 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்க அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஏ.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட 110 பேர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில்... ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆர். மாணிக்கம், விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளர் ஏ.ராமலிங்கம்,  மாதர்சங்கம் எம்.இந்துமதி ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்டத்தலைவர் ஆர்.கலைச்செல்வி போராட்டத்தை தொடங்கி வைத்தார். 
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் ஆ.இளங்கோ தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, விதொச மாவட்டத்தலைவர் ஆர்.வாசு ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.