கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை கீழவடம் போக்கி தெருவை சேர்ந்தவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மண்டல அலுவலகத்தில் பட்டியல் எழுத்தராக பணியாற்றி வருபவருமான துரைராஜ் (45) என்பவர், கடந்த 15 ஆம் தேதி மாலை சன்னதி தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வாயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.49,500 பணத்தை மீட்டு சுவாமிமலை போலீஸாரிடம் 16-ஆம் தேதி ஒப்படைத்தார்.
இந்தப் பணத்தை தவறவிட்டவர் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், திருவலஞ்சுழியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோவிந்தராஜ் மகன் கார்த்தி என்பவர் தன்னுடைய பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சுவாமிமலை ஏடிஎம்-இல் பணம் செலுத்தச் சென்றபோது, மேற்கண்ட பணத்தை தவறவிட்டதை எடுத்துக் கூறி, உரிய ஆதாரங்களை சுவாமிமலை போலீஸாரிடம் அளித்தார்.
இதையடுத்து பணத்தை சுவாமிமலை காவல் ஆய்வாளர் ரேகாராணி, கார்த்தியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார்.
பின்னர் பணத்தை எடுத்து கொடுத்த துரைராஜை அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், போலீஸாரும் பாராட்டி சால்வை அணிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!






