கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பிச்சாடனாருக்கு பிள்ளை
கறி கொடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தத்ரூபமாக நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்ட நாயனார் மிகுந்த சிவபக்தி கொண்டவர். இவருக்கு மனைவி மற்றும் சீராளன் என்ற மகனும் இருந்தனர்.
சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிறுதொண்ட நாயனாரின் சிவபக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான், பிச்சாடனார் வேடத்தில் சிறுதொண்ட நாயனாரின் வீட்டுக்கு செல்கிறார். அப்போது தனக்கு பசிக்கிறது என உணவாக பிள்ளை (குழந்தையின்) கறியை சமைத்து கேட்கிறார். சிறுதொண்ட நாயனாரும் தன் மகன் சீராளனின் உடலை அறுத்து சமைத்து கொடுக்கிறார்.
சிறுதொண்டநாயனாரின் சிவபக்தியை உணர்ந்த சிவபெருமாள், சிறுதொண்டநாயனாரிடம் உன் மகனை கூப்பிடு என கூறுகிறார். அவரும் சீராளன் என கூப்பிடவே தன் மகன் உயிரோடு வருவதை பார்த்து மெய்சிலிர்த்து போகிறார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தினமான சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளான செவ்வாய்க்கிழமை கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் தேர் மண்டபத்தில், சிவபெருமானை பிச்சாடனார் வேடத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள், பிள்ளைக் கறி எனும் பிரசாதத்தை பிச்சாடனாருக்கு வழங்கியும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


