தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாலைவனநாதர் கோயிலில் சித்ரா பௌர்ணமி வழிபாடு

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:29 am

DIN

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் உள்ள மூலவர் பாலைவனநாதர், தவளவெண்ணகை அம்மன்,விநாயகர், முருகர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து, கோயில் வெளிசுற்று பிரகாரத்தில் பக்தர்கள் தேவார, திருவாசகங்களை பாடிய படி பெளர்ணமி திருச்சுற்று வழிபாடு செய்தனர். 
திரளானோர் கலந்து கொண்டு பெளர்ணமி கிரிவலம் வந்து சுவாமி, அம்மன் உள்ளிட்டோரை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், பாபநாசம் ஆன்மிக பேரவையினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.