உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

அதிமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்

மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

Published On :

மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர்,  சுவாமிமலையில் தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை தங்கியிருந்தார்.அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பலர் இணைந்தனர். 
அப்போது,  செய்தியாளர்களிடம்  டிடிவி. தினகரன் கூறியதாவது: தமிழகத்தில் அண்மைக்காலமாக முட்டையில் ஊழல்,  மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஊழல் என எதை எடுத்தாலும் ஊழல்தான்.
ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் இவர்கள்,  அவரின் கொள்கையில் இருந்து தடம் மாறிச் செல்கின்றனர். இப்படி சுயநலமாகச் செயல்படும் கும்பலின் ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். குறிப்பாக,  இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதால் விரைவில் அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தலின் மூலம் இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்றார் டிடிவி. தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.