சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கும்பகோணத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி

தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை, ஆடுதுறை குழந்தைகள் நலச்சங்கம் மற்றும்

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:21 am IST

தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை, ஆடுதுறை குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மகாமகம் குளத்தின் மேற்கு கரையில் இப்பேரணியை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில்,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை முன்னிலை வகித்தார். டாக்டர் ஏ. அன்பழகன் வரவேற்றார். உதவி ஆட்சியர் எம். பிரதீப்குமார், தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பின் செயலாளர் டாக்டர் ஜி. சாம்பசிவம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். 
பேரணியில் அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளி மாணவிகள், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கைகளில் தாய்ப்பால் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். கும்பகோணத்தின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம், மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.