திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, கும்பகோணம் நகரம், தாராசுரம், சுவாமிமலை, திருவிடைமருதூர், அம்மாச்சத்திரம், திருப்பனந்தாள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கும்பகோணம் நகர பேருந்து நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது.
புறநகர் பேருந்துகள் இயங்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எந்தப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்களும், இதர போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் யாரும் வெளியில் கூட வரவில்லை.
இதனால் கும்பகோணம் நகரமே ஸ்தம்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையை உலுக்கிய நிலச்சரிவு: 8 பேர் பலி; மீட்புப் பணி நிறைவு!

டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்! கால அளவு இவ்வளவா?

இந்த ஆண்டு 362 மாணவர்களுக்கு தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் தொகை! - அமைச்சர் வன்னி அரசு
கூகுள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்! சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3


