திண்டுக்கல் நகரில் அண்மையில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில், சென்சாய் என்.நாடிமுத்து தலைமையில் பட்டுக்கோட்டை இஷ்ன்ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் கட்டா பிரிவில் 17 பரிசுகள், சண்டை பிரிவில் 25 பரிசுகள் என மொத்தம் 42 பரிசுகளை தட்டிச் சென்றனர்.
இதில், கட்டா பிரிவில் 5 முதல் பரிசு, ஒரு இரண்டாம் பரிசு, 11 மூன்றாம் பரிசு பெற்றதுடன், சண்டை பிரிவில்
7 முதல் பரிசு, 5 இரண்டாம் பரிசு, 13 மூன்றாம் பரிசுகளை வென்றுள்ளனர்.
சிறப்பம்சமாக, பிளாக் பெல்ட் பிரிவுகளில் என்.ஏ.கமலேஷ் 8 வயதுக்குள்பட்ட கட்டா மற்றும் சண்டை பிரிவில் முதல் பரிசையும், என்.ஏ.முகேஷ் 10 வயதுக்குள்பட்ட கட்டா பிரிவில் முதல் பரிசும், சண்டை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றனர். 11 வயதினருக்கான பிரிவில் கே. விக்னேஷ் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசும், சண்டை பிரிவில் முதல் பரிசும்,
12 வயதினருக்கான கட்டா பிரிவில் எம்.சிவபாலன், டி.இந்திரஜித் ஆகியோர் மூன்றாம் பரிசும், 15 வயதினருக்கான பிரிவில் வி.நரேன் பாலாஜி கட்டா மற்றும் சண்டை பிரிவில் முதல் பரிசும், என்.ஹரிவெங்கடேஷ் சண்டை பிரிவில் 2 -ம் பரிசும், எம்.கே.செளமியா, எஸ்.யு.நிகிலன், எச். ஹார்டின் ஆகியோர் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசும், 17 வயதினருக்கான கட்டா பிரிவில் ராகுல் பிரியன் முதல் பரிசும், 18 வயதினருக்கான சண்டை பிரிவில் எஸ்.நவீன்பிரகாஷ் இரண்டாம் பரிசும், வி.முருகேஷ் பிரசன்னா மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.
சாதனை நிகழ்த்திய மாணவர்களை பட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள், நகர பிரமுகர்கள் திங்கள்கிழமை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 60 கோடி நில மோசடி: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13) - இன்று நல்ல நாள்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


