இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

இதயா மகளிர் கல்லூரி விளையாட்டு விழா

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் புதன்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் புதன்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. 
கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரிச் செயலர் கிளாடின் ஆரோக்கியமேரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் யூஜின் அமலா முன்னிலை வகித்தார்.
குடந்தை மறைமாவட்ட ஆயர் எஃப். அந்தோனிசாமி, அகில இந்திய கையுந்துப்பந்து விளையாட்டு வீரர் ஏ. முத்துசாமி, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றக் கூடிய கல்லூரியின் முன்னாள் மாணவிகளான இளவரசி, காயத்ரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
முன்னதாக, அலங்கார அன்னை பேராலய வளாகத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஏ. அமிர்தசாமி விளையாட்டு தீபத்தை ஆசீர்வதிக்க, கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகனால் தீபமேற்றப்பட்டு, காமராஜர் சாலை, மேம்பாலம் வழியாக கல்லூரியை வந்தடைந்தது. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறைப் பேராசிரியர் நிர்மலா மார்ட்டின், மணிமேகலை, லியோ கவாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.