சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

முன்னாள் படைவீரர் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெறலாம்

நிகழாண்டில் முதலாமாண்டு தொழிற் படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நிகழாண்டில் முதலாமாண்டு தொழிற் படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை  மேலும் தெரிவித்திருப்பது:
நிகழ் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாரிசுதாரர்கள் w‌w‌w.‌k‌s​b.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் 
விவரக்குறிப்பின்படி, இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 
நிகழாண்டில் பல்வேறு புதிய படிப்புகளும் இத்திட்டத்தில் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதற்கான முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநரின் படைப்பணிச் சான்று சுருக்கம் பெற முன்னாள் படைவீரரின் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் சிறாரின் கல்விச்சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம். மேலும், இதற்கு 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவ. 15. 
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய முன்னாள் படை வீரர்கள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.