முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

நிவாரணம் கோரி மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்கக் கோரி

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்கக் கோரி பட்டுக்கோட்டை சட்டமன்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மண் சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை (அறந்தாங்கி முக்கம்) காந்தி சிலை அருகில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏவுமான என்.ஆர். ரெங்கராஜன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்.ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், தஞ்சை மாநகரத் தலைவர் டி.ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் ஏ.கே குமார் வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் ஜெ.ஏ. பழனிவேல், மதுக்கூர் வட்டாரத் தலைவர் எஸ்.வி ரவிச்சந்திரன், மதுக்கூர் பேரூர் தலைவர் ஆர். புஷ்பநாதன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தமாகாவினர் கலந்துகொண்டனர். கட்சியின் பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் பி. வைத்திலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.