கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தஞ்சாவூரில் திடீரென வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை

தஞ்சாவூர் ரயிலடியில் எம்.ஜி.ஆர். சிலையையொட்டி, ஜெயலலிதா சிலை ரகசியமாக அமைத்து, திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென திறக்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தஞ்சாவூர் ரயிலடியில் எம்.ஜி.ஆர். சிலையையொட்டி, ஜெயலலிதா சிலை ரகசியமாக அமைத்து, திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் ரயிலடியில் 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதைச் சுற்றி உள்ள சாலையோரப் பூங்காவைத் தேசியமயமாக்கப்பட்ட வங்கி பராமரித்து வருகிறது.
இந்த எம்.ஜி.ஆர். சிலையைச் சுற்றி தகரங்களால் 10 நாட்களுக்கு முன்பு அடைக்கப்பட்டது. இதனுள் சிலை பராமரிப்புப் பணி நடைபெறுவதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த வளாகத்துக்குள் சிலை அமைப்பதற்கான பீடம் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலையை மாற்றி அமைப்பதற்காக வேலை நடைபெறுகிறது என சிலர் கூறி வந்தனர். இந்நிலையில், இச்சிலையைச் சுற்றியுள்ள தகரங்கள் திங்கள்கிழமை நள்ளிரவு அகற்றப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலையில் பார்த்தபோது எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் ஜெயலலிதா சிலை இருந்தது. இந்த இடத்தில் ஏழு அடி உயரம் கொண்ட பீடத்தில் ஏழரை அடி உயரத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் ஏறத்தாழ 10 நாட்களாக ரகசியமாகப் பீடம் அமைத்து, சிலையை நிர்மாணித்து திங்கள்கிழமை இரவோடு இரவாகத் திறக்கப்பட்டுள்ளது.
இச்சிலைக்கு அதிமுக பகுதி கழக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை மாலை அணிவித்தனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், இச்சிலையை யார் வைத்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அமைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்து, மாலை அணிவித்தோம் என்றனர். 
இச்சிலை முறையாக அனுமதி பெற்று வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக சர்ச்சை நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.