இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

தஞ்சாவூர் கோட் டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை

Updated On :25 டிசம்பர் 2018, 9:44 am IST

தஞ்சாவூர் கோட் டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஐம்பது சதவீத பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் விதமாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின் வசதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். 
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் டிச. 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சங்கத்தின் சார்பில் தொடர்ந்து நாள்தோறும் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மணிமண்டபம் பகுதியில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. முருகேசன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.