கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவர் சி.வி. தங்கையன் தலைமை வகித்தார்.
இதில், நிபந்தனையின்றி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எந்த கட்டுப்பாட்டறை டிஜிட்டல் சிக்னலையும் எடுத்து சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். குறிப்பாக தனியார் டிஜிட்டல் கட்டுப்பாட்டறை சிக்னலை எடுத்து தொழில் செய்வதற்கு இடையூறு செய்யக் கூடாது.
பழைய பதிவின் அடிப்படையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் கட்டாயம் செட்ஆப்பாக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது. 
டிஜிட்டல் சிக்னலை விநியோகம் செய்ய பழைய டிசிஓக்களை நியமனம் செய்ததை கண்டிப்பது.
தனியார் டிஜிட்டல் மூலம் தொழில் செய்யும் பகுதிகளில்,  புதிய ஆபரேட்டர்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நியமிக்கக் கூடாது. முன்னறிவிப்பின்றி கேபிள் டிவி சிக்னலை வாரக்கணக்கில் துண்டிக்கக் கூடாது. 
இலவச செட்ஆப் பாக்ஸ் தொலைந்தாலோ, உடைந்தாலோ அதற்காக முழுத்தொகையையும் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் கேட்பதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தை மாநிலத் தலைவர் டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கே. சந்திரமோகன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஜி. தாமோதரன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் திரளான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com