கோ ஆப் டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்: இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தச் சிறப்பு விற்பனையை தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் சி. சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கோஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல மேலாளர் இரா. சுரேஷ்குமார் தெரிவித்தது: 
இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கைக்குட்டை முதல் பட்டுச்சேலை வரை வாங்கிப் பயனடையலாம். மேலும், மென்பட்டுச் சேலைகள், கோரா பட்டுச் சேலைகள், பருத்தி சேலைகளான கோவை காட்டன்,  சேலம் காட்டன்,  திண்டுக்கல் காட்டன்,  நெகமம் காட்டன்,  ஆர்கானிக் காட்டன்,  உறையூர் காட்டன்,  கூரைநாடு காட்டன்,  வெல்குரோ வேஷ்டிகள்,  படுக்கை விரிப்புகள்,  போர்வைகள்,  ஜமுக்காளங்கள்,  திரைச்சீலைகள்,  சுடிதார்,  நைட்டிகள்,  ரெடிமேட் சர்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இத்திட்டத்தில் தனியாக ஒன்று மட்டும் வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மண்டலத்திற்கான விற்பனை குறியீடாக ரூ. 4 கோடி எனவும், இதில், வைரம் விற்பனை நிலையத்தில் மட்டும் விற்பனை இலக்கு ரூ. 48 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
விழாவில் தஞ்சாவூர் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என். மாதேஸ்வரன், சு. ராஜலட்சுமி, மா. நிர்மலா (தணிக்கை), மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா. சீனிவாசன், வைரம் விற்பனை நிலைய மேலாளர் ஜி. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com