சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலகத் தாய் மொழி நாள்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி நாளையொட்டி,  தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வாயில் முன் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:57 am

DIN

உலகத் தாய்மொழி நாளையொட்டி,  தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வாயில் முன் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இயக்கத்தின் நகரக் குழு உறுப்பினர் அரவிந்த்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணமின்றி தாய் மொழியில் பெறுவதற்குப் போராட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், இயக்கத்தின் பொதுச் செயலர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் மு. இளமுருகன் தலைமை வகித்தார். இதில், மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் ந. பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.