கண்தான விழிப்புணர்வு பேரணி
பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற, "கண் பார்வைக்கோர் நடைபயணம்" என்ற கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற, "கண் பார்வைக்கோர் நடைபயணம்" என்ற கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு லயன்ஸ் சங்க கரூர் மாவட்டத் தலைவர் சேதுகுமார் தலைமை வகித்தார். பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் ஜெயக்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்டத் தலைவர் கனகராஜ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் கண்தான விழிப்புணர்வு பற்றிய துண்டுப் பிரசுரங்களை வணிகர்கள், பொதுமக்களிடம் வழங்கியதோடு, முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, கடைவீதி வழியாக சென்ற பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் லயன்ஸ் சங்க செயலாளர் ராமநாதன், நிர்வாகிகள் தமிழ்செல்வன், ஏகாம்பரம், ராமமூர்த்தி, சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், ராஜா ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...