சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கும்பகோணத்தில் ரயில் மோதி இளைஞர் சாவு

கும்பகோணத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:22 am

DIN

கும்பகோணத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே மாங்குடி வளையப்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஆசைதம்பி (25). இவர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு,  விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஆசைதம்பி சனிக்கிழமை இரவு கும்பகோணம் - தாராசுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து மைசூரு நோக்கிச் சென்ற விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் ஆசைதம்பி நிகழ்விடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீஸார் ஆசைதம்பியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.