பேராவூரணி அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு:7 பேர் மீது வழக்கு
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர். ( 40 ). இவர் வசிக்கும் பகுதியில்


பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர். ( 40 ). இவர் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள பொதுப் பாதையை பலர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஜோசப் என்பவர் பாதையில் லாரியில் மண் கொண்டு வந்து ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் கொட்டினாராம். இதை பிரான்சீஸ் சேவியர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோசப்பின் சகோதரி கிரேசி, கிரேசியின் கணவர் ஆரோ.அருள், ஜான். அருண்பிரபு, பிரவீன்குமார், சேசு இமானுவேல், மெலீக்கீஸ்ராஜ் ஆகிய 7 பேரும் பிரான்சீஸ்சேவியர், அவரது தந்தை பாக்கியம் ஆகியோரை வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கியதாககத் கூறப்படுகிறது. காயமடைந்த பிரான்சீஸ் சேவியர் மற்றும் அவரது தந்தை பாக்கியம் ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின் தொடர்ந்த ஆரோ அருளின் ஆட்கள் மாந்தோப்பு என்ற இடத்தில் மீண்டும் வழி மறித்து தாக்கினராம். இந்த சம்பவம் குறித்து பிரான்சீஸ் சேவியர், தஞ்சை எஸ்பி செந்தில்குமார், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் காவல் உதவி ஆய்வாளர் ஞானசுமதி 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...