சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தமிழகக் கோயில்களில்  களவு போன அனைத்து  சிலைகளையும் மீட்க வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கோயில்களில் களவு போன அனைத்து சிலைகளையும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு தஞ்சாவூர் மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :7 ஜூன் 2018, 9:17 am IST

தமிழகத்தில் உள்ள கோயில்களில் களவு போன அனைத்து சிலைகளையும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு தஞ்சாவூர் மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்து களவு போன ராஜராஜன், லோகமாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டு வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
மேலும், இதுபோல தமிழகக் கோயில்களில் களவு போன விலை உயர்ந்த சிலைகளைத் தொடர்ந்து மீட்டெடுக்கும் பணியைச் செய்ய வேண்டும். 
பெரியகோயிலின் முன்பு சாலையைக் கடக்கச் சிரமப்படும் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் நலன் கருதி பெரியகோயிலின் எதிர்புறம் நடை மேம்பாலத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இயக்கத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார். செயலர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன், மு. செல்வராஜ், செய்தித் தொடர்பாளர் அய்யனாபுரம் க. நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.