காசோலை (செக்) மோசடி வழக்கில் மருத்துவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பட்டுக்கோட்டை செட்டித் தெருவில் வசிப்பவர் மருத்துவர் ஆர்.ராஜேந்திரன் (65). இவர் தஞ்சை சாலையில் சொந்தமாக கிளினீக் நடத்தி வருகிறார்.
பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள தைலம்மை நகரைச் சேர்ந்தவர் அடைக்கலம் செட்டியார் மகன் பாலசுப்பிரமணியன் (54). இவரிடம், மருத்துவர் ராஜேந்திரன் 1 மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி 6.7.2015-ல் ரூ. 12 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக பாலசுப்பிரமணியன் பெயருக்கு 10.8.2015 தேதியிட்டு ரூ. 12 லட்சத்துக்கான செக் கொடுத்துள்ளார். வங்கியில் செலுத்தியபோது போதிய பணம் இல்லாததால் செக் திரும்பி வந்து விட்டதாம்.
இதையடுத்து, செக் மோசடி செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக மருத்துவர் ராஜேந்திரன் மீது 6.10.2015-ல் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் நிறைவில், டாக்டர் ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், தனது தீர்ப்பில் கடன் தொகை ரூ. 12 லட்சத்தை மருத்துவர் ராஜேந்திரன், பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









