தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஒரத்தநாட்டில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி: மார்ச் 19-இல் தொடக்கம்

ஒரத்தநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கோழி வளர்ப்புத் தொழில் முனைவோருக்கான

News image
Updated On :1 மார்ச் 2018, 3:11 am

DIN

ஒரத்தநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கோழி வளர்ப்புத் தொழில் முனைவோருக்கான ஆறு நாள் இலவச பயிற்சி முகாம் மார்ச் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சிக்கான முன்பதிவு இக்கல்லூரியின் கால்நடைப் பண்ணை பயிலக வளாகத்தில் நடைபெறுகிறது.  இப்பயிற்சியில் கோழிப் பண்ணை கட்டட அமைப்பு,  இளங்குஞ்சுகள் பராமரிப்பு,  இனவிருத்தி, குஞ்சு பொரிப்பக மேலாண்மை,  தீவனம் மற்றும் நோய் மேலாண்மை,  விற்பனை வாய்ப்புகள்  உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவான பயிற்சி கல்லூரி வல்லுநர்களால் அளிக்கப்படுகிறது.
  கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் பண்ணையாளர்கள் 04372-234012, 04372-234016 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு இப்பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம் என இக்கல்லூரியின் முதல்வர் க.ந. செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.