திட்டக்குடியில் நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம்
பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடி கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடி கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ச.ஈஸ்வர் தலைமை வகித்துப் பேசும்போது, தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களான சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவி பாசனம் ஆகிய முறைகள் பற்றி விளக்கினார். மேலும், பாசன நீர்மேலாண்மை தொழில் நுட்பங்களைக் கையாண்டு, கணிசமாக தண்ணீரை சேமித்து, பயிர் சாகுபடி பரப்பையும், பயிர் விளைச்சளையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றார்.
வேளாண்மை அலுவலர் சா.சங்கீதா பேசுகையில், நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மானிய விவரங்கள், அத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள், நீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கான மாற்றுப்பயிர் திட்டங்கள் ஆகியவை பற்றி எடுத்துக் கூறினார்.
முகாமில் திட்டகுடியைச் சேர்ந்த 30 விவசாயிகள், வேளாண்மை உதவி அலுவலர் ராஜ்குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் வீ. ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...