தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை தாக்க முற்பட்டதாகக் கூறி தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) பி. காளிமுத்துவிடம் தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலர் ஆர். கரிகால்சோழன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பாகத் தகவல் தரக் கோரினாராம். அதற்கு ஆணையர் கோப்பினை பார்வையிட்டு, உரிய பதில் கடிதம் மூலம் அனுப்பப்படும் எனக் கூறினாராம். அப்போது, ஒரு மணிநேரத்தில் தகவல் தர வேண்டும் என கரிகால்சோழன் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆணையரை பணி செய்ய விடாமல், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்க முற்பட்டதாகக் கூறி கரிகால்சோழன் மீது மேற்குக் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்யப்பட்டது.
இதனிடையே, கரிகால்சோழனைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகம் முன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து கரிகால்சோழனை புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

