திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காசநோயை கண்டறிய நடமாடும் வாகனம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோயைக் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகன முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :14 மே 2018, 10:37 pm

DIN

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோயைக் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகன முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காசநோயைக் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனத்தை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் தொடர்ந்து மே 19-ம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாகனத்தில் பரிசோதனை செய்யும் கருவிகள் உள்ளதால், இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். ஜெயக்குமார், துணை இயக்குநர் (காசநோய்) (பொறுப்பு) டி. மாதவி, சுகாதாரத் துறைத் துணை இயக்குநர் ஏ. சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.