/

ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை

பட்டுக்கோட்டை ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல ஒரு மாதத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது என ஆட்சியர்

News image
Updated On :14 மே 2018, 10:38 pm

DIN

பட்டுக்கோட்டை ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல ஒரு மாதத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பட்டுக்கோட்டை வட்டத்தில் ஆள்நடமாட்டம் உள்ள ரயில்வே பாதையில் திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை நிறுத்தங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே பாதையைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் ஜூன் 15-ம் தேதி வரை பட்டுக்கோட்டையிலிருந்து ராஜாமடம் செல்லும் பாதையைக் கனரக வாகனங்கள் உபயோகிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.