தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களைத் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வலியுறுத்தினர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் வி.கே. சின்னதுரை, செயற்குழு உறுப்பினர் சி.ஆர். அன்பழகன் உள்பட சுமார் 15 பேர் அளித்த மனு:
பணிகொண்டான்விடுதி பெரியகுளத்தின் வடிகாலான நரியாறு வாய்க்கால் காரியாவிடுதி கிராமம் வழியாக நம்பிவயல் மகாராஜசமுத்திரம் காட்டாற்று வாரியில் இணைகிறது. இதனுடைய இரு புறமும் 400}க்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன.
எனவே, நரியாறு வடிகால் வாரியைத் தூர்வாரி ஆங்காங்கே தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த வேண்டும். பல ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யும் வகையில் வழிவகை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல, செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலர் முருகானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வி. கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் சி. பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஆர். ராமச்சந்திரன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 பேர் அளித்த மனு:
செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 24 சிறுபாசன ஏரிகளைத் தூர் வாருவது தொடர்பாக ஒப்பந்தம் விடப்பட்டது.
என்றாலும், முறையாகத் தூர் வாரப்படவில்லை. ஏரியை எந்த முறையில் தூர் வார வேண்டும் என்ற முறையைப் பின்பற்றாமல், இதன் மதிப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப பணிகள் நடைபெறாமல் உள்ளது. ஏரியைத் தூர் வாரி, ஆழப்படுத்தி கரைகளைப் பலப்படுத்தாமல், ஏற்கெனவே ஏரியில் உள்ள வேலிக்கருவை மரங்களை மட்டும் அகற்றி விட்டு, கரைகளை மட்டப்படுத்தி உள்ளனர்.
எனவே, இப்பணியை ஆட்சியர் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
குளத்தைச் சுத்தம் செய்ய கோரி... பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி கிராம இளைஞர்கள் அளித்த மனு:
ராஜகிரி பீர்ஷா நகரில் உள்ள தேவரடியார் குளத்தைச் சுத்தம் செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக பல முறை ஊராட்சி மன்றத் தலைவர், பாபநாசம் வட்டாட்சியர் முதல் தற்போதுள்ள தனி அலுவலர் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் மனு கொடுத்து எவ்வித பயனுமில்லை. இக்குளத்தில் ஏற்படும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சுற்றுப்புற மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இக்குளத்தைச் சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!

வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்!

திருச்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

