மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பேராவூரணி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து திருட்டு

பேராவூரணி அருகே கொரட்டூர் கிராமத்தில் ரெட்டவயல் சாலையில் ஒதுக்குப்புறமாக  வயல்வெளியில் டாஸ்மாக் கடை (எண் 8029) இயங்கி வருகிறது. 

Updated On :21 மே 2018, 1:54 am

பேராவூரணி அருகே கொரட்டூர் கிராமத்தில் ரெட்டவயல் சாலையில் ஒதுக்குப்புறமாக  வயல்வெளியில் டாஸ்மாக் கடை (எண் 8029) இயங்கி வருகிறது. 
இந்த கடையில் மேற்பார்வையாளராக கேசவராஜ் என்பவரும்,  விற்பனையாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, ராஜா ஆகியோரும் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் கடை திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர்,  கேசவராஜூவுக்கு தகவல் அளித்தனர். அவர் வந்து பார்த்த போது, கடையின் இரும்பு ஷட்டர் கதவை உடைத்து பெயர்த்து கடையினுள் புகுந்த நபர்கள் சில்லறைக்காக வைத்திருந்த ரொக்கம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து  கடை மேற்பார்வையாளர் கேசவராஜ்,  டாஸ்மாக் உயர் அலுவலர்களுக்கும், பேராவூரணி காவல்துறைக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்தை டாஸ்மாக் அலுவலர் திருஞானம், காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பார்வையிட்டனர். மதுக்கடையை உடைத்து  ரொக்கம்,  மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.