கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பூஜைபொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (56). விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா. இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன ராமர், சீதா தேவி, லட்சுமணர் சிலைகள், பூஜை பொருள்கள், தங்க நகைகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தம்பதி காலையில் எழுந்து பார்த்தபோதுதான் வீட்டில் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில், பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

