தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2,86,501 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 4 பேருக்கு மருத்துவ நிதியாக ரூ.1,46,622-க்கான காசோலைகளையும், இரு பயனாளிகளுக்குச் சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ. 1,18,826 மற்றும் ரூ. 21,053-க்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார். முன்னதாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், பொதுமக்களும் எடுத்துக்கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜம், கருவூல அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!
படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!
சீரடியில் த.வெ.க. தலைவர் விஜய் வழிபாடு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

