ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பைக்கில் சென்ற இளைஞர் சுவரில் மோதி சாவு

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கம்மாளர் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் ராஜா (28). தொழிலாளி. இவரது நண்பர் ஜான்பீட்டர் (26). இருவரும் பட்டீஸ்வரத்திலிருந்து தாராசுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு

Updated On :21 மே 2018, 9:11 pm

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கம்மாளர் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் ராஜா (28). தொழிலாளி. இவரது நண்பர் ஜான்பீட்டர் (26). இருவரும் பட்டீஸ்வரத்திலிருந்து தாராசுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு வருவதற்காக பைக்கில் வந்தனர்.
இவர்களது வாகனம் சோழன் மாளிகை அருகில் வந்த போது, நிலைதடுமாறி சாலையோர சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜான்பீட்டர் காயமடைந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் அளித்ததுடன், காயமடைந்த ஜான்பீட்டரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த பட்டீஸ்வரம் போலீஸார், இறந்த ராஜாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.