முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையிலும், மேலவீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ராஜீவ் காந்தியின் உருவபடத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் உறுதிமொழியை ஏற்றனர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், நகரத் தலைவர் மிர்சாவுதீன், வட்டார தலைவர்கள் பாலதண்டாயுதம், நாராயணசாமி, மகாதேவன், அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

