ஒரத்தநாட்டில் அமமுக நிர்வாகியின் உணவகம் சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு யானைக்கார தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (50). அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரத்தநாடு பகுதியின் நகரச் செயலராக இருந்து வரும் இவர் வீட்டினருகே கூரை கொட்டகையில் உணவகம் நடத்தி வருகிறார். சனிக்கிழமை நள்ளிரவு உணவகத்தில் மின் கசிவால் தீப்பற்றியது. தகவலின்பேரில், ஒரத்தநாடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடையில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் தீ மேலும் பரவியது. இதில் கடையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ் உள்பட சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடுவானத்தில்..! அன்பே டயானா படத்தின் புதிய பாடல்!

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


