நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அதிராம்பட்டினம் ஆலடிக்குளத்திற்கு வந்து சேர்ந்தது இறைவை நீர்

அதிராம்பட்டினத்தில் நசுவினி ஆறு ஓடையிலிருந்து வெளியேறும் உபரி நீர் 20 எச்.பி. மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு

Updated On :8 அக்டோபர் 2018, 8:51 am IST

அதிராம்பட்டினத்தில் நசுவினி ஆறு ஓடையிலிருந்து வெளியேறும் உபரி நீர் 20 எச்.பி. மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு, பேரூராட்சி ஆலடிக்குளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்து சேர்ந்தது. 
அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1,800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கவும்,  அதில் 20 எச்.பி. மோட்டார் பொருத்தி, வறட்சி காலங்களில் அதிராம்பட்டினத்திலுள்ள 8 ஊருணிகளுக்கு நீரை இறைத்து நிரப்பவும் பேரூராட்சி நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது. இதற்காக திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து, ஆலடிக்குளம், செக்கடிக்குளம், மன்னப்பங்குளம் உள்ளிட்ட 8 குளங்களுக்கு நசுவினி ஆறு ஓடையிலிருந்து நீர் இறைக்கப்பட்டு நிரப்பட்டது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் நசுவினி ஆறு ஓடையிலிருந்து வெளியேறும் உபரி நீர் 20 எச்.பி.மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ஆலடிக்குளத்தை வந்தடைந்தது. இதை, அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிரை கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் முகமது தமீம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.