பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் அருகே திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலையின் 2ஆவது பிரிவில் வேலை செய்து வரும் 154 ஊழியர்களுக்கு, ஆலை நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம்.
2012 முதல் ஈட்டிய விடுப்பு பணம், 2012 முதல் மிகை ஊதியம், 2017ஆம் ஆண்டு போனஸ் பண்டிகை முன்பணம் உள்ளிட்டவற்றை வழங்கவில்லையாம். இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், ஆலை நிர்வாகம் ஆலை ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆலையின் தொழிற் சங்க தலைவர் வி.செளந்தர்ராஜன் தலைமையில் ஆலை ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
போராட்டத்தின் 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆலையின் பிரதான வாசல் முன்ஆலை ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் ஏற்கும்வரை இந்த போராட்டம் தொடரும் என ஆலை ஊழியர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்

ஓவர்கள் குறைக்கப்படாது: ஆர்சிபி பந்துவீச்சு; அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
