அதிராம்பட்டினத்தில் நசுவினி ஆறு ஓடையிலிருந்து வெளியேறும் உபரி நீர் 20 எச்.பி. மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு, பேரூராட்சி ஆலடிக்குளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்து சேர்ந்தது.
அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1,800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கவும், அதில் 20 எச்.பி. மோட்டார் பொருத்தி, வறட்சி காலங்களில் அதிராம்பட்டினத்திலுள்ள 8 ஊருணிகளுக்கு நீரை இறைத்து நிரப்பவும் பேரூராட்சி நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது. இதற்காக திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து, ஆலடிக்குளம், செக்கடிக்குளம், மன்னப்பங்குளம் உள்ளிட்ட 8 குளங்களுக்கு நசுவினி ஆறு ஓடையிலிருந்து நீர் இறைக்கப்பட்டு நிரப்பட்டது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் நசுவினி ஆறு ஓடையிலிருந்து வெளியேறும் உபரி நீர் 20 எச்.பி.மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ஆலடிக்குளத்தை வந்தடைந்தது. இதை, அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிரை கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் முகமது தமீம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.25! 35 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


