மும்பை: ஹோர்முஸ் நீரிணை மீதான தடை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவும் ஈரானும் முரண்பட்டு நின்றபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நெருங்கி வருவதாக எழுந்த நம்பிக்கையின் காரணமாக, இன்றைய அந்நிய செலாவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 35 காசுகள் உயர்ந்து ரூ. 95.25ஆக வர்த்தகம் நிறைவுபெற்றது. இதன் மூலம் ரூபாய் தொடர்ந்து 3வது வர்த்தக அமர்வாக ஏற்றம் அடைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.36 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே, ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 95.12 வரைக்கும் சென்ற பிறகு, குறைந்தபட்சமாக ரூ. 95.44 வரையிலும் சென்றது. வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 35 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.25 என்ற நிலையில் நிலைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ. 95.60 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
Summary
The rupee appreciated 35 paise to close at 95.25 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









