தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.95.23 என்ற வரலாறு காணாத குறைந்த நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தன.

News image
Updated On :4 மே 2026, 9:24 pm IST

மும்பை: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்கள், உலகச் சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, கச்சா எண்ணெய் விலையை உயர்வாக வைத்திருப்பதோடு, பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களையும் கிளப்பியதால், இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.95.23 என்ற வரலாறு காணாத குறைந்த நிலையில் நிறைவடைந்தன.

ஒரு பீப்பாய்க்கு 110 டாலர் என்ற அளவில் தொடர்ந்து நீடித்து வரும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவைப் போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் பொருளாதாரங்களின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், வெளிநாட்டு மூலதனம் தொடர்ந்து வெளியேறி வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக பாதித்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.95 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு அதன் மதிப்பை இழந்து, முந்தைய வர்த்தக முடிவிலிருந்து 39 காசுகள் சரிந்து, இறுதியில் ரூ. 95.23 என்ற நிலையில் நிலைபெற்றது.

முன்னதாக, கடந்த வாரம் வியாழக்கிழமையன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 94.84 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.