ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

நகைக் கடையில் வெள்ளிப் பொருள்களை திருடிய 3 பேர் கைது

பாபநாசம் அருகே சாலியமங்கலம் கடைவீதி பிரதான சாலையில்  உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (52) எ

Updated On :3 செப்டம்பர் 2018, 3:20 am

பாபநாசம் அருகே சாலியமங்கலம் கடைவீதி பிரதான சாலையில்  உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (52) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அண்மையில் இந்தக் கடைக்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் நகை வாங்குவதுபோல் நடித்து, கடையிலிருந்த சுமார் 1 கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருள்களை திருடிசென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, நகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனர்.
இதில்,  தஞ்சாவூர் மாவட்டம் சாமிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சுந்தரம்பாள் (48), ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த நெஞ்செழியன் மனைவி இந்திரா (45), மருங்குளம் குடிக்காடு வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (51) ஆகிய 3 பேரும்தான் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும்  சனிக்கிழமை போலீஸார்  கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.