கும்பகோணத்தில் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி, பன்னாட்டு அரிமா சங்கங்கள், குடந்தை திருக்குறள் அரிமா சங்கம், செல்லம்மாள் அறக்கட்டளை, அழகர் அறக்கட்டளை, இந்திய தன்னார்வ சங்கம் ஆகியவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 20 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் கார்த்திகேயன் வழங்கினார். மேலும், இவர்களுக்குத் தென்னங்கன்றுகளும், நூறு ஆசிரியர்களுக்குச் சிறப்பு விருதுகளும், தேக்கு, கொய்யா, வேங்கை நாட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், அரிமா சங்க நிறுவனத் தலைவர் கிட்டப்பா முருகேசன், இயக்குநர் மருதையன், செயலர்கள் ராம. முத்துராமன், சிவக்குமார், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் கோவி. அம்பிகா நீலமேகம், கும்பகோணம் சீனி. நலங்கிள்ளி, கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அம்பிகாபதி, கார்த்திக் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி ஆலோசகர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச்சாவடி: குஜராத்தில் தொடக்கம்!

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி!

இஸ்ரேல் கன்னியாஸ்திரியைத் தாக்கிய யூத இளைஞா் கைது!

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

